
கொல்கத்தா: ஜூலை 30-
மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் டியூச்சா கிராமத்தைச் சேர்ந்த மினார் மொண்டல் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். பின்னர் அப்பணியிலிருந்து விலகிய அவர், கல் குவாரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்தகம் செய்து வந்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதித்த அவர், ஆரடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மினார் மொண்டலின் வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பல மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.













