Home விளையாட்டு லெவன் அணிக்​கெ​தி​ரான ஆட்​டம்: இந்தியா வெற்றி

லெவன் அணிக்​கெ​தி​ரான ஆட்​டம்: இந்தியா வெற்றி

கொழும்பு, ஆக. 10- இலங்கை பிரதமர் லெவன் அணிக்​கெ​தி​ரான 3 நாள் ஆட்​டத்​தில் இந்​திய அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​திய வீரர்​கள் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், முகமது சிராஜ் அபார​மாக விளை​யாடி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.கொழும்பு நகரில் உள்ள நான்​டிஸ்​கிரிப்ட்ஸ் கிரிக்​கெட் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் இலங்கை பிரதமர் லெவன் அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 363 ரன்​கள் குவித்​தது. பின்​னர் முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 6 விக்​கெட் இழப்​புக்கு 357 ரன்​கள் குவித்​திருந்​தது. தேவ்​தத் படிக்​கல் 142 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​நிலை​யில் நேற்று 3-ம் நாள் ஆட்​டம் நடை​பெற்​றது. இந்​திய அணி தனது முந்​தைய நாள் ஸ்கோ​ரான 6 விக்​கெட் இழப்புக்கு 357 ரன்​கள் என்ற நிலை​யிலேயே டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து 6 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை இலங்கை பிரதமர் லெவன் அணி விளை​யாடியது. தொடக்க ஆட்​டக்​கார​ராக களமிறங்​கிய நிஷன் மதுஷ்கா அதிரடி​யாக விளை​யாடி 63 ரன்​கள் குவித்த நிலை​யில் ரிட்​டயர்ட் ஹர்ட் முறை​யில் வெளி​யேறி​னார். ரவீந்​திர ரசந்தா 8, பசிந்து சூரியபண்​டாரா 4, சோனல் தினுஷா 9 ரன்​கள் சேர்த்​தனர். பவன் ரத்​னாயகே 16 ரன்​களும், அஞ்​சலா பண்​டாரா 35 ரன்​களும், நிபுன் தனஞ்​செயா 46 ரன்​களும் குவித்தனர். இலங்கை பிரதமர் லெவன் அணி 45 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 200 ரன்​கள் குவித்​திருந்​த​போது 2-வது இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. ரமேஷ் மெண்​டிஸ் 16, கேஷரா நுவந்தா 1 ரன்​னுடன் களத்​தில் இருந்​தனர். இந்​திய அணி தரப்​பில் குர்​னூர் பிரார் 2, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். இதையடுத்து 207 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் இந்​திய அணி 2-வது இன்​னிங்ஸை விளை​யாடியது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கிய யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலும், ஷுப்​மன் கில்​லும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர்.