Home செய்திகள் தேசிய செய்திகள் விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு

விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: மே 9 –
போக்​கு​வரத்து விபத்து தரவு​கள் குறித்து தேசிய குற்றப்​ப​திவு ஆவணக் காப்​பகம் கூறி​யிருப்​ப​தாவது:
நாட்​டில் சராசரி​யாக நாள் ஒன்​றுக்கு 546 பேர் போக்​கு​வரத்து தொடர்​பான விபத்​து​களில் உயி​ரிழக்​கின்​றனர். கடந்த 2023-ம் ஆண்​டில் 1.98 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். போக்​கு​வரத்து விபத்துகளில், சாலை விபத்​துக்​கள்​, ர​யில்வே விபத்​து​கள் இரண்டும் அடங்​கி​யுள்​ளன. கடந்த 2023-ம் ஆண்​டில் 4.91 லட்​சம் சாலை விபத்​துகள் நடை​பெற்​றன. இந்த எண்​ணிக்கை 2024-ம் ஆண்​டில் 4.95 லட்​ச​மாக அதி​கரித்​தது. விபத்து உயி​ரிழப்​பு​களில் உ.பி. (27,071) முதல் இடத்​தி​லும், தமிழகம் (20,390) 2-வது இடத்​தி​லும், மகா​ராஷ்டிரா (19,475) 3-வது இடத்​தி​லும் உள்​ளது. இவ்​வாறு ஆவணக்​ காப்​பகம்​ தெரிவித்துள்ளது.