Home செய்திகள் தேசிய செய்திகள் விவாகரத்து ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

விவாகரத்து ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

புதுடெல்லி: ஜூன் 16-
ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார்.
டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கணவர் வீட்டை விட்டு வெளி​யேறிய ஷிகா, தனது தாய் வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார். கணவர் சவுரபிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நல நீதி​மன்​றத்​தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 5 ஆண்​டு​களாக நீதிமன்றத்தில் நடை​பெற்று வந்​தது.இதனிடையே சில வாரங்​களுக்கு முன்பு ஷிகா​வின் தந்​தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டது. நிதிச்​சுமை காரண​மாக அவர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்த தகவல் சவுரபுக்கு தெரிய​வந்​தது. உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு சென்ற அவர், குரு​கி​ராமில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மாம​னாரை சேர்த்​தார்.மருத்​துவ சிகிச்​சைக்​கான முழுச்​செல​வையும் அவரே ஏற்​றுக் கொண்​டார். இதன்​காரண​மாக இரு குடும்​பங்​களுக்கு இடையே இருந்த கசப்​புணர்வு மறைந்​தது. ஷிகா​வின் மனநிலை​யிலும் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டது.சில நாட்​களுக்கு முன்பு டெல்​லி​யில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் விவாகரத்து வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. இதில் ஆஜராக சவுரபும் ஷிகா​வும் நீதி​மன்​றத்​துக்கு சென்​றனர்.அப்​போது நீதி​மன்ற வளாகத்​தில் கணவரை பார்த்த ஷிகா, ஓடோடிச் சென்று கட்​டியணைத்து கதறி அழு​தார். தனது கையில் வைத்​திருந்த விவாகரத்து வழக்கு ஆவணங்​களை கிழித்​தெறிந்து வீசி​னார்.