Home செய்திகள் தேசிய செய்திகள் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: மத்திய அரசு

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: மத்திய அரசு

புதுடெல்லி, ஆக. 22- ஓஎஸ்​எம் என்ற ஆன்​ஸ்​கிரீன் மார்க்​கிங் முறை​யில் சிபிஎஸ்இ தேர்​வு​களை மதிப்​பீடு செய்​த​தில் பாதிக்​கப்​பட்ட மாணவர்​கள் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்யப்பட்​டது. இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்த போது, மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள், ‘இந்த நடை​முறை​யால் சுமார் 3 லட்​சம் மாணவர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். எனவே, இந்த விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்ட மாணவர்​களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்​டும்’ என்று கோரிக்கை வைத்​தனர்.அப்​போது, மத்​திய அரசின் சொலிசிட்​டர் ​ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘மறும​திப்​பீட்​டிற்​காக ஒரு​வார கால அவகாசம் வழங்​கப்​பட்​டு, 1.68 லட்​சம் மாணவர்​கள் தங்​களது மதிப்​பெண்​களை மறுஆய்வு செய்ய விண்​ணப்​பித்​திருந்​தனர். ஆனால், தற்​போது கருணை மதிப்​பெண்​கள் கேட்​கிறார்​கள். அதற்கு எந்த சாத்தியமும் இல்​லை’ என தெரி​வித்​தார். இதையடுத்து மதிப்பீடு செய்யப்பட்ட விடைத் தாள்களில் குளறுபடிகள் கண்டறியப்பட்ட தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.