
சென்னை, நவ. 23-
தங்கம் விலை கடந்த 10-ந்தேதி முதல் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து, தங்கம் விலை தொடர்ந்து குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எப்போது வேண்டுமானாலும் விலை குறையலாம் என்று நிபுணர்களும் அவ்வப்போது தெரிவித்திருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த 10-ந்தேதி முதல் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்தது. குறிப்பாக, கடந்த 18-ந்தேதி முதல் விலை பெருமளவில் குறைந்தது. அன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,040 குறைந்தது. தொடர்ந்து, கடந்த 19-ந்தேதி சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது. கடந்த 20-ந்தேதி சவரனுக்கு ரூ.3,760-ம், கிராமுக்கு ரூ.470-ம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.91,720-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து, ரூ.11,465-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 16 நாட்களில் ரூ.15,360 குறைந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.135 உயர்ந்து, ரூ.11,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிற













