
வாஷிங்டன், அக். 8- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தனது கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளார்.
தாம் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், இதை பெருமையாகக் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு புதன்கிழமை வாஷிங்டன் திரும்பிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வேறு யாரும் செய்யாத விஷயங்களை நான் செய்துள்ளேன். நான் பெருமை பேசவில்லை; உண்மைகளைத்தான் கூறுகிறேன். எந்த அதிபரும் இதுவரை போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை. நான் 8 போர்களை முடித்துள்ளேன்” என்றார்.தனது சமாதான முயற்சிகள் தொடரும் என்றும், அந்தப் பட்டியலில் மேலும் ஒரு மோதல் விரைவில் சேரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், ஈரான் தொடர்பான மற்றொரு போர் நிறுத்த முயற்சியில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. டிரம்பின் கூற்றுகளை உண்மைச் சரிபார்ப்பாளர்கள் ஏற்கெனவே கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். அவர் குறிப்பிடும் சில மோதல்கள் முறையான போர்களாக இருக்கவில்லை என்றும், அவற்றில் அமெரிக்காவின் பங்கு ஒவ்வொன்றிலும் மாறுபட்டதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
















