
புதுடெல்லி, ஜூலை 31- பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரெனிவபிள்ஸ் (என்ஐஆர்எல்) 900 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்காக குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகாம் (ஜியுவிஎன்எல்) நிறுவனத்திடமிருந்து விருப்ப கடிதத்தைப் பெற்றுள்ளது. கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறையில் இத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பசுமை மின்சக்தி திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஜியுவிஎன்எல் கொள்முதல் செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஐஆர்எல் நிறுவனம் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான பசுமை ஆற்றல் திட்டங்கள் மற்றும் சொத்துகளைப் பெற்று நிர்வகிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.













