
இஸ்லாமாபாத்: மார்ச் 31 –
பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர் அன்வர் பாகிஸ்தானில் அதேபோல மர்ம மரணமடைந்துள்ளார். இது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியா மீதான தீவிரவாத செயல்களுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவும் உலக நாடுகளும் பல முறை எச்சரித்தும் கூட எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. இது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கிடையே கடந்த சில காலமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர் அன்வர் பாகிஸ்தானில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அவர் எப்படி உயிரிழந்தார்.. இதற்குப் பின்னணியில் யார் என இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முகமது தாகிர் அன்வர் மரணத்தை ஜெய்ஷ் அமைப்பின் அதிகாரப்பூர்வ சேனல் உறுதி செய்துள்ளது. திங்கட்கிழமை இரவு பகவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் உஸ்மான் வாலி மசூதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டு இருந்தது. தாஹிர் அன்வரின் மரண காரணம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. துரந்தர் சம்பவம்? இணையத்திலும் அன்வர் மரணம் பேசுபொருளாக மாறியுள்ளது. மர்மமான முறையில் தாகிர் உயிரிழந்த சூழலில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். சிலர் துரந்தர் படத்தையும் ஒப்பிட்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















