Home விளையாட்டு தடு​மாறும் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா? – பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை

தடு​மாறும் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா? – பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை

மும்பை, ஏப்ரல் 16- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தில் மும்பை அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மான ரோஹித் சர்மா விளை​யாடு​வது சந்​தேகம் என தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்றி, 3 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்​பாக அனைத்​துத் துறை​களி​லும் வலு​வான வீரர்​களைக் கொண்ட ஒரு முழு​மை​யான அணியாகத் மும்பை இந்​தி​யன்ஸ் தெரிந்​தது. 13 சீசன்களுக்​குப் பிறகு முதல் முறை​யாகத் இம்​முறை தங்​களது தொடக்க ஆட்​டத்​தில் அந்த அணி வெற்றி கண்டிருந்தது. ஆனால் அதன் பின்​னர் எதிர்​பார்த்த அளவிற்​குச் சிறப்​பாக விளை​யா​டா​மல் ஏமாற்​றமளிக்​கும் வகை​யிலேயே மும்பை அணி செயல்​பட்டு வரு​கிறது. இந்த சீசனில் அவர்​களது சரிவுக்கு பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்​சில் பவர்​பிளே​வில் சிறப்​பாக செயல்​ப​டாததே முக்​கிய​மான காரணங்​களில் ஒன்​றாக இருந்து வரு​கிறது.இதை சரிசெய்​வ​தில் மும்பை அணி தீவிர கவனம் செலுத்​தக்​கூடும். இது​வரை விளை​யாடி விளை​யாடி உள்ள 4 ஆட்​டங்​களி​லும் மும்பை இந்​தி​யன்ஸ் அணி பவர்​பிளே கட்​டத்​தில் வெறும் மூன்று விக்​கெட்​டு​களை மட்​டுமே வீழ்த்​தி​யுள்​ளது. ஜஸ்​பிரீத் பும்ரா ரன்​களைக் கட்​டுப்​படுத்​து​வ​தில் கச்​சித​மாகச் செயல்​பட்​டாலும் நடப்பு தொடரில் அவர், ஒரு விக்​கெட் கூட கைப்​பற்​ற​வில்​லை. அனுபவம் வாய்ந்த டிரெண்ட் போல்ட், ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் அணி​யில் இருந்​தா​லும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. பேட்​டிங்​கிலும் பவர்​பிளே​வில் மும்பை அணி முழு வேகத்​துடன் செயல்​பட​வில்​லை. பெரும்​பாலான அணி​கள் பவர்​பிளே பீல்​டிங் கட்​டுப்​பாடு​களைச் சாதக​மாக்​கிக் கொண்டு வலு​வான அடித்​தளத்தை அமைக்க முயற்சி செய்து வரு​கின்​றன. ஆனால் மும்பை அணி​யால் தொடக்​கத்​திலேயே ஆட்​டத்​தின் வேகத்தை அதி​கரிக்க முடிய​வில்​லை. இதனால் சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்மா உள்​ளிட்ட மிடில்​-ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​கள் மீது அதி​கப்​படி​யான நெருக்​கடி ஏற்​படு​கிறது. எனினும் அவர்​களும் இது​வரை ஏமாற்​றத்​தையே அளித்​துள்​ளனர். சூர்​யகு​மார் யாதவ் ஒரு அரைசதம் அடித்​திருந்​தா​லும், திலக் வர்மா ரன்​கள் சேர்க்க போராடி வரு​கிறார். அவர், நடப்பு தொடரில் இது​வரை விளை​யாடிய ஆட்​டங்​களில் முறையே 20, 0, 14 மற்​றும் 1 என மிகக் குறைந்த ரன்​களையே எடுத்​துள்​ளார். கடந்த மார்ச் மாதம் நடை​பெற்ற டி 20 உலகக்​கோப்​பை​யில் மிகச் சிறப்​பாகச் செயல்​பட்ட இங்​கிலாந்து அணி​யின் ஆல்​-ர​வுண்​டர் வில் ஜாக்ஸ் அணி​யில் இல்​லாதது மும்பை அணிக்கு பின்​னடை​வாக அமைந்​துள்​ளது.