Home தலைப்பு செய்தி விஜய்க்கு எதிராக சூழ்ச்சி

விஜய்க்கு எதிராக சூழ்ச்சி

சென்னை: மே 8-
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் அமைச்சர் ஆவதை தடுக்க சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது. டெல்லி பிஜேபி பின்னணியில் திமுக அதிமுக கூட்டணி அமைக்க இருப்பதாக இன்று காலை முதல் புயல் வேகத்தில் செய்திகள் பரவி வருகிறது. இது காலை தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அதிமுக எம்பி தம்பிதுரை தீவிர ஆலோசனை நடத்தினார் அதை தொடர்ந்து வெளியே வந்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி வழங்க இருப்பதாகவும் நல்லதே நடக்கும் என்றும் கூறினார். இதற்கிடையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக உயர்மட்ட தலைவர்களிடம் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் ஏற்போம் என்று திமுக உயர்மட்ட தலைவர்கள் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் விஜய் ஆதரவு கேட்டு திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் வலது மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை தெரிவிக்காமல் தாமதப்படுத்தும் அஸ்திரத்தை கையில் எடுத்து உள்ளன. அதாவது கட்சி ஒயர் மட்ட கூட்டத்தைக் கூட்டி ஆதரவு தெரிவிப்பது இல்லையா என்பதை குறித்து முடிவு எடுப்போம் என்று கூறி வருகின்றனர். அதன்படி இன்று காலை ஆலோசனை நடத்தப்பட்டது இன்று மாலையும் இந்த கட்சிகள் ஆலோசனை நடத்த இருக்கிறது. அதன் பிறகு இவர்கள் ஆதரவு தெரிவிப்பார்களா இல்லையா என்பது குறித்து தெரியவரும். இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமது கட்சி எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் முதலமைச்சர் ஆகவே கூடாது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். அவர் ஒரு முறை முதலமைச்சர் ஆகிவிட்டால் எம்ஜிஆர் போல் கடைசி வரை மக்கள் ஆதரவோடு ஆட்சி நடத்துவார். எனவே அவர் முதல்வர் ஆகக்கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் விருப்பம் தெரிவித்து மு க ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. திமுக அதிமுக கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைக்க டெல்லி பிஜேபி மேலிடம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. நீரும் நெருப்பம்போல் பரம வைரியாக உள்ள திமுக அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பிஜேபி மேட விருப்பத்தை ரஜினிகாந்த் மு க ஸ்டாலினை சந்தித்து கூறியதாகவும் இதற்கு மு க ஸ்டாலின் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து வட்டது ஆனால் மற்ற கூட்டணி கட்சிகள் இழுத்தடித்து வருகிறது. அதேசமயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நான்கு எம்எல்ஏக்களை கொண்டுள்ளது ஆமமுக ஒரு எம்எல்ஏ கொண்டுள்ளது. ஆனால் இவர்கள் பிஜேபி கூட்டணியில் தேர்தலை சந்தித்ததால் அவர்களிடம் விஜய் ஆதரவு கேட்காமல் இருக்கிறார். ஆதரவு கேட்டால் ஒருவேளை அவர்கள் ஆதரிக்க முன் வருவார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மதச்சார்பற்ற கூட்டணி உடன் ஆட்சி அமைப்பதில் விஜய் உறுதியாக இருப்பதால் அவர் முதல்வர் பதவி ஏற்க முடியாமல் சிக்கலில் இருக்கிறார். மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் விஜய் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் திமுக அதிமுக இரண்டு திராவிட கட்சிகளும் தமது கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை திமுக அதிமுக கூட்டணி அமைத்தால் இந்த இரண்டு திராவிட கட்சிகளின் கதை இதோடு முடிந்து விடும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களுக்கு மேலும் ஆதரவு அதிகரிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் இன்று மாலைக்குள் தமிழக கவர்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக கூறப்படுகிறது எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடைபெற்று வரும் இந்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் விஜய் முதலமைச்சர் பதவி ஏற்பு தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதும் அதற்கு சர்வ கட்சிகலம் சேர்ந்து சூழ்ச்சி செய்து வருவதும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது