Home மாவட்டங்கள் பெங்களூர் விஜய் உதவியாளராக ஜோதிடர் – கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு

விஜய் உதவியாளராக ஜோதிடர் – கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு

சென்னை: மே 13-
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தனது அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரியாகபிரபல ஜோதிடர் ராதன் பண்டிட்டை நியமித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளே அதிருப்தி தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று துல்லியமாகக் கணித்தவர் ராதன் பண்டிட். அந்த நன்றிக் கடனுக்காகவும், நிர்வாக முடிவுகளில் ஆலோசனை பெறவும் அவரை முதல்வர் விஜய் நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நியமனத்திற்கு முதல்வர் விஜய்யின் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறுகையில்:
அறிவியல் ரீதியான நிர்வாகம் தேவைப்படும் இந்த காலத்தில், ஒரு ஜோதிடரை அரசுப் பதவியில் அமர்த்துவது பகுத்தறிவுக்கும் மக்களாட்சிக்கும் எதிரானது. அரசு நிர்வாகத்தில் இத்தகைய போக்குகள் ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும் என்று கூறியுள்ளார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஜோதிடர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இதேபோல் திமுக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விஜய் தனது உதவியாளராக ஜோதிடரை அதாவது அரசு சார்பில் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன