Home மாவட்டங்கள் பெங்களூர் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியது

2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியது

பொன்னேரி: மே 20 –
பழவேற்காடு பகு​தி​ கடலில் மீன்​பிடி வலை​யில் சிக்​கிய 2-ம் உலகப் போரில் பயன்​படுத்​தப்​பட்ட பீரங்கி குண்​டால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.
பொன்​னேரி அருகே உள்ள பழவேற்​காடு, அதையொட்​டி​ உள்ள 30-க்​கும் மேற்பட்ட மீனவ கிராமங்​களைச் சேர்ந்த மீனவர்​கள் மீன் பிடி தொழிலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.
அந்த வகை​யில், நேற்று முன் தினம் இரவு, பழவேற்​காட்டை அடுத்த பசி​யா​வரம் மீனவ கிராமத்​தைச் சேர்ந்த தேவபிர​காஷ் (35), 4 பேருடன் பழவேற்​காடு பகு​தி​யில், வங்​காள விரி​குடா கடலில் மீன் பிடித்துக் கொண்​டிருந்​தார்.அப்​போது மீன் பிடி வலை​யில், துருப்​பிடித்த நிலை​யில் ஒரு அடி உயரம் மற்​றும் 10 கிலோ எடை​உள்ள இரும்​பாலான உருளை போன்ற மர்மப் பொருள் சிக்​கியது.
அதிர்ச்​சி​யடைந்த தேவபிர​காஷ், திருப்​பாலை​வனம் போலீ​ஸாருக்கு தகவல் அளித்​து​விட்​டு, மர்மப் பொருளு​டன் பழவேற்​காடு, கடற்​கரைக்கு திரும்​பி​னார். அங்கு விரைந்த போலீ​ஸார், மீன்​பிடி வலை​யில் சிக்​கிய மர்மப் பொருளை மீட்​டனர். ஆவடி, வெடிகுண்டு நிபுணர்​களின் சோதனை​யில், மீன்​பிடி வலை​யில் சிக்​கிய மர்மப் பொருள், 2-ம் உலகப் போரில் பயன்​படுத்​தப்​பட்ட பீரங்கி குண்டு என்​பது தெரிய வந்​தது.