Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் சென்னை வருகிறார் கவர்னர்

தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் சென்னை வருகிறார் கவர்னர்

சென்னை: மே 20 –
முதல்​வர் விஜய்​யுடன் 9 அமைச்​சர்​கள் மட்​டுமே பதவி​யேற்ற நிலை​யில், நாளை அமைச்​சரவை விரி​வாக்​கம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
தமிழகத் தேர்​தலில் 108 இடங்​களைப் பிடித்த தவெக தலை​மை​யில் கடந்த மே.10-ம் தேதி புதிய ஆட்சி அமைந்​தது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றார். அவருடன் கே.ஏ.செங்​கோட்​டையன், ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, அருண்​ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், டி.கே.பிரபு, நிர்​மல் குமார், கீர்த்​தனா ஆகியோர் அமைச்​சர்களாக பொறுப்​பேற்​றனர்.
தவெக பெரும்​பான்​மைக்கு வேண்​டிய 118 இடங்​களுக்​காக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக மற்​றும் ஐயுஎம்​எல் கட்​சிகளு​டன் கூட்​டணி அமைத்​துள்ள நிலை​யில், காங்​கிரஸ் மட்​டும் அமைச்​சர​வை​யில் இடம் கோரி​யுள்​ளது. தவிர, முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி தலை​மையி​லான அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் 25 பேர் அரசுக்கு ஆதரவு தெரி​வித்​துள்​ளனர். அவர்​களில் குறிப்​பிட்ட சிலருக்​கும் அமைச்​சர​வை​யில் இடம் அளிக்க வாய்ப்​புள்​ள​தாக கூறப்​பட்​டது. ஆனால், அதி​முக உட்​கட்சி பிரச்​சினைக்கு இது​வரை முடிவு எது​வும் கிடைக்​க​வில்​லை.
தமிழகத்​தைப் பொறுத்த வரை முதல்​வர் மற்​றும் 33 அமைச்​சர்​கள் அமைச்​சர​வை​யில் இடம் பெறலாம். தற்​போது முதல்​வர் மற்​றும் 9 அமைச்​சர்​கள் மட்​டுமே உள்​ளனர். அதனால் அமைச்​சரவை விரி​வாக்​கம் செய்​யப்பட வேண்​டிய அவசி​யம் உள்​ளது. இதற்​காக மூத்த அமைச்​சர்​களு​டன் முதல்​வர் விஜய் சமீபத்​தில் ஆலோ​சனை நடத்​தி​னார்.
இந்​தச் சூழ்​நிலை​யில் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் இன்று சென்னை வரு​கிறார். எனவே, நாளை வியாழக்​கிழமை தமிழக அமைச்​சரவை விரி​வாக்​கம் இருக்​கும் என தகவல் வெளி​யாகி உள்​ளது. அப்​போது காங்​கிரஸ் சார்​பில் 2 பேருக்கு அமைச்​சர​வை​யில் இடம் கிடைக்​கும், தவெக சார்​பில் சிலர் இடம் பெறலாம் என்று தலை​மைச் செயல​க வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.