Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க சூப்பர் மார்கெட்டுகளில் இந்திய மாம்பழங்களுக்கு அதிக வரவேற்பு

அமெரிக்க சூப்பர் மார்கெட்டுகளில் இந்திய மாம்பழங்களுக்கு அதிக வரவேற்பு

சியாட்டில், மே 20- அமெரிக்​கா​வில் தற்​போது இந்திய மாம்​பழங்​களின் மீதான ஆசை அதி​க​மாக உள்​ளது. அல்​போன்​சா, கேசர், லங்ரா மற்​றும் பங்​க​னபள்ளி போன்ற பிரீமி​யம் ரக மாம்பழங்கள் கடைகளில் மின்​னல் வேகத்​தில் விற்​றுத் தீர்​கின்​றன. இந்​திய மாம்​பழங்​கள் கப்​பல் அல்​லது விமானம் மூலம் அனுப்​பப்​படு​வதற்கு முன்பே முன்​ப​தி​வில் விற்​றுத் தீர்ந்து விடு​கின்​றன. மேலும் சுமார் 12 மாம்​பழங்​கள் கொண்ட ஒரு பெட்​டி​யின் விலை 60 டாலருக்கு (ரூ.5750) விற்​கப்​படு​கிறது. அதிக எண்ணிக்கையுள்ள மாம்பழ பெட்​டிகள் 1,000 டாலர் வரை விற்கப்படு​கிறது. அமெரிக்​கா​வின் சியாட்​டில் நகரில் உள்ள இந்திய தூதரகம் மேற்​கொண்ட முயற்​சி​யின் பலனாக, இந்தியாவில் இருந்து மாம்​பழங்​கள் அமெரிக்​காவைச் சென்றடைந்​துள்​ளன. அமெரிக்கா​வுக்கு மெக்​சிகோ​வில் இருந்​தும் மாம்​பழங்​கள் அதி​கம் வரு​கின்​றன. ஆனால், அவை இந்​திய மாம்பழ வகை​களின் ருசி, மணம் ஆகிய​வற்​றுக்கு நிக​ராக இல்​லை. அதனால் இந்​திய மாம்பழ வகைகளுக்கு அங்கு அதிக வரவேற்பு உள்​ளது.அமெரிக்​கா​வின் மாம்பழ பிரியர்​களுக்​கு, ஷர்மா என்​பவரின் ‘இசட் இசட் மேங்​கோ’ என்ற நிறு​வனம் ‘மாம்பழ சீசன் பாஸ்’ வழங்கு​கிறது. இதற்​காக 1,000 டாலர் செல​வழிக்க அமெரிக்​கர்​கள் தயா​ராக இருக்​கின்​றனர். அவர்​களுக்​கு, சீசன் முடி​யும் வரை வாராந்​திர மாம்​பழப் பெட்டி அவர்​களின் வீட்​டு வாசலுக்​கே விநியோகிக்​கப்​படுகின்​றன.