Home செய்திகள் தேசிய செய்திகள் மணப் பெண்களை ஏற்பாடு செய்வதாக 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதி கைது

மணப் பெண்களை ஏற்பாடு செய்வதாக 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதி கைது

போபால், மே 27- திரு​மணத்​துக்கு மணப்​பெண்​களை ஏற்​பாடு செய்து தரு​வ​தாகக் கூறி 42 குடும்​பத்​தாரை ஏமாற்​றிய தம்​ப​தியை மத்திய பிரதேச போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மத்​திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்​கள் முகேஷ் பைரங்​கி, சுனிதா தம்பதி​யினர். ஆனால், இவர்​கள் பெரும்​பாலும் வரன் பார்த்து தராமல் மணப்​பெண் விவரம் கேட்டு வருபவர்​களை ஏமாற்றி வந்துள்​ளனர். இந்​நிலை​யில் அண்​மை​யில் மிகப்​பெரிய கூட்​டுத் திரு​மணத்தை நடத்​தப் போகிறோம் என்று கூறி 42 மணமகன் வீட்​டாரிட​மிருந்து தலா ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்​ட​ணம் பெற்றுள்ளனர். 42 குடும்​பங்​களிட​மிருந்து சுமார் ரூ.10 லட்சத்துக்கும் அதி​க​மான பணத்தை அவர்​கள் பெற்​றுள்​ளனர். இந்த மணமகன்​கள் பெரும்​பாலானோருக்கு அதிக வயதாகி​யும் திரு​மணம் நடை​பெற​வில்​லை. தகுந்த மணப்​பெண் கிடைக்காததால் விரக்​தி​யில் இருக்​கும் குடும்​பத்​தாரை கண்டறிந்து அவர்​களுக்கு மணப்​பெண் ஏற்​பாடு செய்து தருவதாக முகேஷ், சுனிதா தம்​ப​தி​யினர் கூறி ஏமாற்​றி​யுள்​ளனர். மணப்பெண்​கள் அனை​வரும் இந்​தூரிலுள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்ந்​தவர்​கள் என்று கூறி பெண்​களின் புகைப்படங்களைக் காட்​டி​யுள்​ளனர். இந்த புகைப்​படங்​கள் அனைத்​தும் இன்​டர்​நெட்​டில் இருந்து பதிவிறக்​கம் செய்​யப்​பட்​ட​வை​யாகும். மே 24ம் தேதி தேவாஸிலுள்ள ராதாகஞ்ச் கிளப் வளாகத்​தில் திரு​மணம் நடைபெறும் என்​றும், மணப்​பெண் குடும்​பத்​தார் அனை​வரும் அங்கு வந்து சேரு​மாறும் முகேஷ், சுனிதா கூறி​யுள்​ளனர். இந்​நிலை​யில், மே 24-ம் தேதி காலை ராதாகஞ்ச் கிளப் வந்​த​போது அங்கு திரு​மணத்​துக்​கான ஏற்​பாடு​கள் எது​வும் நடை​பெற​வில்லை என்​பதும் அங்கு மணப்​பெண்​களும் இல்லை என்​ப​தை​யும் கண்டு மணமகன்​கள் வீட்​டார் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். இது குறித்து கேட்​டதற்கு இந்​தூரில் இருந்து அவர்​கள் கிளம்பி விட்​டனர் என்​றும் விரை​வில் வந்து சேர்ந்து விடு​வர் என்​றும் முகேஷ், சுனிதா தம்பதியினர் சமாளித்​துள்​ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காத்​திருந்த நிலை​யில், யாரும் வராத​தால் தாங்​கள் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த மணமகன்​கள், முகேஷ், சுனிதா தம்​பதி மீது புகார் கொடுத்​தனர்​. இதையடுத்து அவர்​கள்​ கைது செய்​யப்​பட்​டனர்​.