Home மாவட்டங்கள் பெங்களூர் கோவை சிறுமி கொடூர கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீசார் தீவிரம்

கோவை சிறுமி கொடூர கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீசார் தீவிரம்

கோவை: மே 27-
கோவை அருகே சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்து கொல்​லப்​பட்ட வழக்​கில், குற்​றப்​பத்​திரி​கையை தயாரிக்​கும் பணியை காவல்​துறை​யினர் தீவிரப்​படுத்தி உள்​ளனர்.
கோவை மாவட்​டத்​தைச் சேர்ந்த தம்​ப​தி​யின் 10-வயது மகள், கடந்த 21-ம் தேதி பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.
இதுதொடர்​பாக, சிறுமி​யின் பக்​கத்து வீட்டை சேர்ந்த கார்த்​திக், நண்​பர் மோகன்​ராஜ் ஆகியோரை போக்சோ மற்​றும் கடத்​தல் பிரிவு​களில் வழக்கு பதிந்து சூலூர் போலீ​ஸார் கைது செய்​தனர்.
போலீ​ஸாரிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்​திக் மாடி​யில் இருந்து கீழே குதித்​த​தில் அவரது கால், கை முறிந்​தது. அவர் சிகிச்​சைக்​காக கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.
மோகன்​ராஜ் கோவை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்​.
இச்​சம்​பவம் தொடர்​பாக குற்​றப்​பத்​திரிகை தயாரிக்​கும் பணியை போலீ​ஸார் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். இதுதொடர்​பாக மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலை​மை​யில் நேற்​று​முன்​தினம் மாலை உயர் அதி​காரி​கள் கலந்து கொண்ட ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.
இவ்​வழக்கு தொடர்​பான குற்​றப்​பத்​திரிகை தயாரிப்​புப் பணியை தீ
விரப்​படுத்​துதல், கைது செய்​யப்​பட்ட இரு​வரை​யும் காவலில் எடுத்து விசா​ரித்​தல், இந்த வழக்​குக்கு தேவை​யான அறி​வியல் பூர்​வ​மான ஆதா​ரங்​களை திரட்​டு​தல், வழக்கு தொடர்​பாக கண்​டறியப்​பட்ட சாட்​சிகளை முறைப்​படுத்தி விசா​ரணைக்கு ஆஜர்​படுத்த நட
வடிக்கை எடுத்​தல் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. சிறுமி கடத்​தப்​பட்ட இடம், அடைக்​கப்​பட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட இடம், சடல​மாக மீட்​கப்​பட்ட இடம் ஆகிய இடங்​களில் போலீ​ஸார் ஆய்வு நடத்தி தகவல்​களை சேகரித்து வரு​கின்​றனர்.