Home செய்திகள் உலக செய்திகள் மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா அடுத்த மோதலுக்கு தயாராகிறாரா டிரம்ப்?

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா அடுத்த மோதலுக்கு தயாராகிறாரா டிரம்ப்?

வாஷிங்டன், ஜூன் 9- சீனா நாட்டின் டெக் நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஸ்மார்ட் போன், கார் , சமூகவலைதள செயலிகள் மூலம் மற்ற நாடுகளை சீனா உளவு பார்ப்பதாக தொடர்ச்சியாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக அமெரிக்க ராணுவ தகவல்களை முறைகேடாக சீனா அணுகுகிறது என கூறுகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் சீனாவின் முன்னணி நிறுவனங்களான அலிபாபா, பைடு மற்றும் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD) ஆகியவற்றைத் தங்களின் தேசிய பாதுகாப்பு கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. அதாவது இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீனாவின் ராணுவத்திற்கு உதவி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சீன தனியார் நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்பங்களை சீன ராணுவத்துடன் பகிர்ந்து கொள்வது கட்டாயம் என்ற கொள்கை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பெண்டகன், அமெரிக்காவில் செயல்படும் பெரிய சீன நிறுவனங்கள் மூலம் தங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகிறது. பென்டகனின் ‘1260H’ கருப்புப் பட்டியலில் ஏற்கனவே 130 சீன நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2025இல் சேர்க்கப்பட்ட ‘டென்சென்ட்’ நிறுவனமும் இப்பட்டியலில் தொடர்கிறது. கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதால் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் வணிகம் செய்ய முழுத் தடை விதிக்கப்படாது.