Home செய்திகள் உலக செய்திகள் ட்ரம்ப் அமல்படுத்திய எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து

ட்ரம்ப் அமல்படுத்திய எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து

வாஷிங்டன்: ஜூன் 10-
எச்1பி விசா கட்டண உயர்வை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்​துள்​ளது.கடந்த 1990-ம் ஆண்​டில் எச்1பி விசாவை அமெரிக்க அரசு அறிமுகம் செய்​தது. இதன்​மூலம் அமெரிக்க நிறு​வனங்​கள், திறன்​வாய்ந்த வெளி​நாட்டு ஊழியர்​களை தற்​காலிக அடிப்​படை​யில் பணி​யமர்த்தி வரு​கின்​றன. எச்​1பி விசாவுக்​கான கட்​ட​ணம் 1,000 டாலர் முதல் 7,500 டால​ராக (ரூ.1 லட்​சம் முதல் ரூ.6 லட்​சம் வரை) இருந்​தது.
கடந்த ஆண்டு செப்​டம்​பரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1 பி விசாவுக்​கான கட்​ட​ணத்தை ஒரு லட்​சம் டால​ராக (ரூ.95 லட்​சம்) உயர்த்​தி​னார். இதற்கு அமெரிக்​கா​வின் பன்​னாட்டு நிறு​வனங்​கள், ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன.
இந்த சூழலில் எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து கலிபோர்னி​யா, மாசசூசெட்​ஸ், அரிசோ​னா, கொல​ராடோ, கனெக்​டிகட், டெல​வெயர், ஹவாய், இலி​னாய், மேரி லேண்ட், மிக்சிகன், மினசோட்டா உள்​ளிட்ட 20 மாகாண அரசுகள் சார்​பில் மாச​சூசெட்ஸ் மாகாண பெடரல் நீதி​மன்​றத்​தில் கடந்த ஆண்டு டிசம்​பரில் வழக்கு தொடரப்​பட்​டது.
இந்த வழக்கை நீதிபதி லியோ டி சொரோகின் விசா​ரித்து நேற்று முன்​தினம் தீர்ப்பு வழங்​கி​னார். “அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் அனு​மதி இன்றி எச்​1பி விசா கட்​ட​ணத்தை அதிபர் ட்ரம்ப் உயர்த்தி உள்​ளார். இது சட்​ட​விரோத​மானது. எனவே எச்​1பி விசா கட்டண உயர்வு ரத்து செய்​யப்​படு​கிறது’’ என்று தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.இந்த தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “பெடரல் நீதி​மன்ற நீதிப​தி​கள் பெரும் சவாலை அளித்து வருகின்றனர். நீதி​மன்ற நடை​முறை​களு​டன் போராடு​வது பெரும் தொல்​லை​யாக உள்​ளது. நமது நாட்​டின் நலனுக்கு எதி​ராக நீதிபதிகள் செயல்​படு​வது மிகுந்த வருத்​தம் அளிக்​கிறது’’ என்றார்.
அமெரிக்க உள்​துறை செய​லா​ளர் மார்க்​வெய்ன் முல்​லின் கூறும்​போது, “நாட்டு மக்​கள், குடும்​பங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கும் வகை​யில் அதிபர் ட்ரம்ப் செயல்​பட்டு வரு​கிறார். அமெரிக்​காவின் வேலை​வாய்ப்​பு​களை வெளி​நாட்​டினர் தட்​டிப் பறிப்​பதை தடுக்கவே எச்​1பி விசா கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டது.
வெளி​நாட்​டின​ரால் நாடு முழு​வதும் குற்​றங்​கள் பெரு​கு​கின்​றன. நாட்​டின் கலாச்​சா​ரம் சீர்​குலைகிறது’’ என்றார்.
அமெரிக்க அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் டெய்​லர் ரோஜர்ஸ் கூறும்​போது, “எச்​1பி விசா கட்டண உயர்வு தொடர்​பான மாச​சூசெட்ஸ் மாகாண பெடரல் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு சார்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​படும். இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் அமெரிக்க மக்​களுக்கு சாதக​மான தீர்ப்பு கிடைக்​கும் என உறு​தி​யாக நம்​பு​கிறோம்’’ என்​றார்.