Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம் – கண்டித்த மத்திய அரசு

அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம் – கண்டித்த மத்திய அரசு

டெல்லி: ஜூன் 11-
ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் மீண்டும் வெடித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று ஓமன் கடல் பகுதியில், வணிக கப்பல் மீது அமெரிக்க நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமாகியிருக்கின்றனர். இதனால், இந்தியாவுக்கான அமெரிக்க துணை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஓமன் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் ஜேசன் மீக்ஸை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த 3 நாட்களில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல்கள் மீது நடத்தப்படும் 2வது தாக்குதல் இதுவாகும்.
சம்பவத்தின் பின்னணி ஓமன் கடற்கரைக்கு அருகே ‘செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பல் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் மொத்தம் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக, கடந்த ஜூன் 8-ம் தேதி ‘எம்.டி. மாரிவெக்ஸ்’ (M/T Marivex) என்ற மற்றொரு கப்பல் மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி அதைச் செயலிழக்கச் செய்தன. அந்தக் கப்பலிலும் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்தியாவின் கடும் கண்டனம் இந்தச் சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிகக் கப்பல்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை. மோதல்களின் நேரடி விளைவாகவே இது பார்க்கப்படுகிறது. சர்வதேச கடல் வழிப்பாதையில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.