Home மாவட்டங்கள் பெங்களூர் இடஒதுக்கீடு உயர்வு வழக்கு: ஜூலை 15-ல் இறுதி விசாரணை

இடஒதுக்கீடு உயர்வு வழக்கு: ஜூலை 15-ல் இறுதி விசாரணை

பெங்களூரு: ஜூன் 24-
கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 50-லிருந்து 56 சதவீதமாக உயர்த்தியதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், வரும் ஜூலை 15-ஆம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, 384 கே.ஏ.எஸ் அதிகாரி பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்துவிட்டதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கோரியது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுப்பு தெரிவித்துவிட்டது. நீதிமன்ற அனுமதியின்றி எந்தவொரு புதிய பணி நியமனங்களையும் செய்யக் கூடாது என்ற தடை உத்தரவு தொடரும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.