Home செய்திகள் தேசிய செய்திகள் பங்குச் சந்தை ஒரே நாளில் ரூ.4.61 லட்சம் கோடி இழப்பு

பங்குச் சந்தை ஒரே நாளில் ரூ.4.61 லட்சம் கோடி இழப்பு

மும்பை, ஜூன் 24- உல​களா​விய சந்​தைகளின் பலவீன​மான போக்கு மற்றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை பங்​கு​களின் கடுமை​யான வீழ்ச்சி காரண​மாக, இந்​திய பங்குச்சந்தைகள் நேற்​றைய வர்த்தகத்​தில் கடும் சரிவைச் சந்​தித்​தன. மும்பை பங்​குச்​சந்​தைக் குறி​யீ​டான சென்​செக்ஸ் ஒரே நாளில் 893 புள்​ளி​கள் வரை சரிந்​து, 76,200 புள்​ளி​களாக வீழ்ச்​சி​யடைந்​தது. அதே​போல், தேசிய பங்​குச்​சந்​தைக் குறி​யீ​டான நிஃப்டி 278 புள்​ளி​கள் குறைந்து 23,824 புள்​ளி​களாக சரிந்​தது. நேற்​றைய வர்த்​தகத்​தில் ஏற்​பட்ட இந்த திடீர் வீழ்ச்​சி​யால், முதலீட்​டாளர்​களின் சொத்து மதிப்​பில் சுமார் ரூ.4.61 லட்​சம் கோடி ஒரே நாளில் துடைத்​தெறியப்​பட்​டது. கடந்த வாரம் சரிவைக் கண்டு திங்​கள்​கிழமை மீண்​டெழுந்த ஐடி பங்​கு​கள், நேற்று மீண்​டும் கடுமை​யான விற்​பனை அழுத்தத்திற்கு உள்​ளாகின. முன்​னணி நிறு​வனங்​களான டிசிஎஸ், இன்ஃ​போசிஸ், விப்ரோ ஆகிய நிறு​வனங்​களின் பங்குகள் தலா 3 சதவீதத்​திற்​கும் மேல் வீழ்ச்​சி​யடைந்​தன. உலகளா​விய நிறு​வனங்​களின் மென்​பொருள் செல​வினக் குறைப்பு மற்​றும் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தால் ஐடி துறை​யில் ஏற்​பட்டு வரும் மாற்​றங்​கள் குறித்த கவலைகளே இதற்கு முக்​கிய காரணங்​களாக கூறப்​படு​கிறது. மேலும், ஆசிய பங்​குச்​சந்​தைகளில் நேற்​றைய வர்த்​தகம் கரடியின் பிடி​யில் சிக்​கியது. குறிப்​பாக, தென் கொரி​யா​வின் முதன்மை பங்​குச்​சந்​தைக் குறி​யீ​டான கோஸ்பி சுமார் 10% வரை வீழ்ச்​சி​யடைந்​தது. சாம்​சங் எலக்ட்​ரானிக்ஸ் 13% வரை​யும், எஸ்கே ஹைனிக்ஸ் 12% வரை​யும் சரிந்​தன. சந்தை மிகக் குறுகிய காலத்​தில் அசுர வேகத்​தில் உயர்ந்​த​தால், முதலீட்​டாளர்​கள் தங்​களின் லாபத்தை பதிவு செய்ய முற்பட்டனர். இந்த சரிவால் தென் கொரிய சந்​தை​யில் வர்த்தகத்தை தற்​காலிக​மாக நிறுத்​தும் ‘சர்க்​யூட் பிரேக்​கர்’ நடைமுறைப்படுத்தப்பட்​டு, 20 நிமிடங்​கள் வர்த்​தகம் நிறுத்தப்பட்டது.