Home பக்தி கும்பாபிஷேகம் – மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

கும்பாபிஷேகம் – மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

மதுரை, ஜூன் 26- மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் செப். 17-ல் நடை​பெற உள்ள கும்​பாபிஷேகத்தை முன்​னிட்டு முகூர்த்​தக்​கால் நடும் விழா நேற்று நடை​பெற்​றது. மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் கும்​பாபிஷேகம் செப். 17-ம் தேதி நடை​பெறும் என கடந்த திமுக ஆட்​சி​யில் இந்து சமய அறநிலை​யத்​துறை சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் உறுதி அளிக்​கப்​பட்​டது. கும்​பாபிஷேகத்தை முன்​னிட்டு திருப்​பணி​கள் நடந்து வரு​கின்​றன. தீ விபத்​தில் சேதமடைந்த வீர​வசந்​த​ராயர் மண்​டபத்​தில் 79-வது தூண் நிலைநிறுத்​தும் பணி சில நாட்​களுக்கு முன்பு நிறைவு​பெற்​றது. இந்​நிலை​யில், கும்​பாபிஷேகத்​துக்​கான பணி​களை தொடங்​கும் வகை​யில் முதல் பணி​யாக முகூர்த்​தக்​கால் நடும் விழா நேற்று நடை​பெற்​றது. பழைய திருக்​கல்​யாண மண்​டபத்​தில் சிவாச்​சா​ரி​யார்​களால் முகூர்த்​தக்​காலுக்​கான பூஜைகள் நடந்​தன. யாக​சாலை​யில் வைத்து பூஜிக்​கப்​பட்ட புனிதநீ​ரால் அபிஷேகம், தீபா​ராதனை நடந்​தன. பின்​னர் ஆயிரங்​கால் மண்​டபம் அருகே வடக்​கு, கிழக்கு ஆடி வீதி சந்​திப்​பில் காலை 11.40 மணிக்கு முகூர்த்​தக்​கால் நடப்​பட்​டது. இதில் எம்​எல்​ஏக்​கள் மதார் பதுருதீன், தங்​கப்​பாண்​டி, கார்த்​தி​கேயன், கருப்​பை​யா, அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், இணை ஆணை​யர் நா.சுரேஷ், அறங்​காவலர்​கள் மற்​றும் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.