Home செய்திகள் உலக செய்திகள் சீஷெல்ஸ் உடன் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீஷெல்ஸ் உடன் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

விக்டோரியா: ஜூன் 29-
சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகள் இடையே கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமைந்​துள்ள சீஷெல்ஸ் தீவின் 50-வது தேசிய தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதையொட்​டி, சீஷெல்ஸ் தலைநகர் விக்​டோரி​யா​வுக்கு அவர் நேற்று முன்​தினம் சென்​றார். இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்​டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது வழங்​கப்​பட்​டது.
அந்​நாட்டு அதிபர் பாட்​ரிக் ஹெர்​மினி, விருதை வழங்கி கவுர​வித்​தார். சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, காலநிலை மாற்​றம் தொடர்​பான நடவடிக்​கைகள், சிறு நாடு​களின் வளர்ச்​சியை ஊக்​கு​விப்​ப​தில் அக்​கறை காட்​டு​வது ஆகிய​வற்​றில் பிரதமர் மோடி​யின் பங்​களிப்​பை பாராட்டி இந்த விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த விருதை​யும் சேர்த்து பிரதமர் மோடி இது​வரை 33 சர்​வ​தேச விருதுகளைப் பெற்​றுள்​ளார்.சீஷெல்ஸ் நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் மோடி நேற்று சிறப்​புரை நிகழ்த்​தி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: எனக்கு வழங்​கப்​பட்ட ‘கார்​டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதுக்​காக 140 கோடி இந்​தி​யர்​கள் சார்​பில் சீஷெல்ஸ் மக்​களுக்​கும், அரசுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். சீஷெல்ஸ் நாடு 50-வது தேசிய தினத்​தைக் கொண்​டாடு​கிறது. அத்​துடன், இந்​தியா – சீஷெல்ஸ் தூதரக உறவின் 50-வது ஆண்​டை​யும் கொண்​டாடு​கிறோம். இரு நாடு​கள் இடையே வர்த்​தகம், கலாச்​சார ரீதி​யான உறவு வலு​வடைந்து வரு​கிறது.
கடந்த பிப்​ர​வரி​யில் சீஷெல்ஸ் அதிபர் பாட்​ரிக் ஹெர்​மினி இந்​தி​யா​வில் அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது பல்​வேறு துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்ற உறுதி மேற்​கொள்​ளப்​பட்​டது. குறிப்​பாக, சீஷெல்ஸ் நாட்​டுக்​குத் தேவை​யான டிஜிட்​டல் தொழில்​நுட்ப உதவி​களை இந்​தியா வழங்​கும். இதன் ஒரு பகு​தி​யாக, இந்​தி​யா​வின் யுபிஐ டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றத் திட்​டத்தை செயல்​படுத்த இரு நாடு​கள் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது.