Home செய்திகள் தேசிய செய்திகள் விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது

விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது

மும்பை: ஜூன் 29-
​மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார்.
நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி, மும்​பை​யில் ஊர்​வலம் நடைபெற்​றது. ரே ரோடு பகு​தி​யில் உள்ள ரஹ்ம​தா​பாத் மயானத்துக்கு அரு​கில் நடை​பெற்ற ஊர்​வலத்​தில் பங்கேற்றவர்களுக்​கு, ஒரு​வர் மாத்திரையை (கேப்சூல்) விநியோகித்​துள்​ளார். குறிப்​பாக, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்​டு, அந்த மாத்​திரைகளை வலி நிவாரணி மற்​றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்​திரைகள் என்று கூறி அவர் கொடுத்​துள்​ளார்.
இதில் சந்​தேகமடைந்த ஒரு பெண் போலீ​ஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்​து, அங்கு விரைந்து சென்ற போலீ​ஸார் மாத்திரைகளை விநி​யோகித்த பயாஸ் பிரேம்ஜி என்​பவரை கைது செய்​தனர். அவரை போலீஸ் காவலில் வைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதனிடையே, இந்த மாத்​திரைகளை உட்​கொண்ட 11 பேர் உடல்​நலக்​குறைவு ஏற்​பட்டு உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். தற்​போது அவர்​கள் அனை​வரும் ஆபத்​தான கட்​டத்​தைத் தாண்​டி​யுள்​ளனர். இந்த மாத்திரையை உட்​கொண்ட சல்​மான் சையத் என்​பவருக்கு கடுமை​யான வயிற்று வலி​யும், வாந்​தி​யும் ஏற்​பட்​டுள்​ளது. இது குறித்து மும்பை மாநகர காவல் துணை ஆணை​யர் ஜெயந்த் மீனா கூறும்​போது, “பு​காரின் பேரில் மாத்​திரைகளை விநி​யோகித்த பயாஸை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிட​மிருந்து 14,900 மாத்​திரைகளைப் பறி​முதல் செய்​தனர். அந்த மாத்திரைகளில் எலி விஷம் மற்​றும் பிற பூச்​சிக்​கொல்​லிகளில் பயன்​படுத்​தப்​படும் ‘ஜின்க் பாஸ்​பைடு’ என்ற மிக ஆபத்​தான வேதிப்​பொருள் கலக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது.
மேலும், அந்த நபர் 30,000 வெற்று கேப்சூல்​களை​யும், 50 கிலோ பாஸ்​பரஸை​யும் ஆர்​டர் செய்​திருந்​தது தெரிய ​வந்​துள்​ளது. ஊர்வலத்​தில் பங்​கேற்ற ஆயிரக்​கணக்​கான மக்​களைக் கொல்வதே தனது நோக்​கம் என்று விசா​ரணை​யின்​போது பயாஸ் ஒப்​புக்​கொண்​டார். பிபிஏ பட்​ட​தா​ரி​யான இந்த நபர் அடிக்​கடி வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். குறிப்​பாக, அவர் இதற்கு முன்பு ஈரான் மற்​றும் இராக் நாடு​களுக்​குச் சென்று வந்துள்​ளார். இதையடுத்​து, பயாஸ் மீது பைகுல்லா காவல் நிலை​யத்​தில் பாரதிய நியாய சன்​ஹிதா (பிஎன்​எஸ்) பிரிவு 123-ன் கீழ் (குற்​றம் செய்​யும் நோக்​கத்​துடன் விஷம் போன்​றவற்​றால் காயம் ஏற்படுத்துதல்) வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தச் சதி​யின் பின்னணி​யில் ஏதேனும் தீவிர​வாதத் தொடர்பு உள்​ளதா என்பது குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கிறோம்” என்றார்​.