Home மாவட்டங்கள் பெங்களூர் நடைபாதையில் கார் மோதி வாலிபர் பலி

நடைபாதையில் கார் மோதி வாலிபர் பலி

சித்ரதுர்கா: ஜூலை 22-
நடைபாதையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொளல்கெரே தாலுகா, டி.நுலேனூர் அருகே இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஹொளல்கெரே தாலுகா தகே கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் (30) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
காரின் மோதியதில் படுகாயமடைந்து கால் முறிவு ஏற்பட்ட பெண், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கோர விபத்தின் திடுக்கிடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து சித்ரஹள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.