Home மாவட்டங்கள் பெங்களூர் மதுரை, கோவை ‘மெட்ரோ’ நிராகரிப்பு

மதுரை, கோவை ‘மெட்ரோ’ நிராகரிப்பு

சென்னை: ஜூலை 27-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள்தொகை இல்லை என்று காரணம் கூறியுள்ளது.சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ள
தால், மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.
மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 32 கி.மீ.தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கவும், 27 கி.மீ. தூர உயர்மட்டப் பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 5 கி.மீ. தூர சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது.
கோவையில் 39 கி.மீ. தூரத்துக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.