
திருவனந்தபுரம், ஜூலை 28- டெல்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மோகன்தாஸ் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் பெண்களை கூட்டு பலாத்காரம் செய்தும் போராட்டத்தை ஒடுக்கி இருப்பேன் என அவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நீட் முறைகேடுகள் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் நடத்திய போராட்டம் நாடு முழுக்க பரவியது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பிறகே இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே டெல்லி மாணவர் போராட்டம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளரும் பாஜகவின் முன்னாள் கேரள நிர்வாகியுமான டி.ஜி. மோகன்தாஸ் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்புவதாக இருக்கிறது. தாவது டெல்லியில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பார்கள் என்றும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.













