Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணை தடுப்புக் காவலில் வைத்த அதிகாரிகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணை தடுப்புக் காவலில் வைத்த அதிகாரிகள்

வாஷிங்டன், ஆகஸ்ட் 19- இந்​திய வம்​சாவளிப் பெண் வெங்கட வசம்​செட்டி கடந்த 27 வருடங்​களாக அமெரிக்காவில் வசித்து வரு​கிறார். மேலும் இவர் கிரீன் கார்​டை​யும் வைத்​துள்​ளார். இவருக்கு 2 மகள்கள் உள்​ளனர். இவர்​கள் இரு​வருமே அமெரிக்​கா​வில் பிறந்து அங்​கேயே வசித்து வரு​கின்​றனர். மேலும் வெங்கட வசம்​செட்​டிக்கு 2 பேரக்​குழந்​தைகளும் உள்ளனர். மகள்​களு​டன் வெங்கட வசம்செட்டி டெக்​சாஸில் வசித்து வரு​கிறார். இவரது மகள் யஷஸ்​வினி வசம்​செட்​டி, குடியேற்​றப்​பிரிவு வழக்​கறிஞ​ராக உள்​ளார். மேலும், வெங்கட வசம்​செட்​டி, 2013-ம் ஆண்டு முதல் வடக்கு கரோலி​னா​வில் உள்ள பள்​ளி​யில் சிறப்​புக் குழந்​தைகளுக்​கான ஆசிரியை​யாக பணியாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், வெங்கட வசம்​செட்டி அண்​மை​யில் சார்​லோட் நகரிலுள்ள குடியேற்​றப்​பிரிவு அலு​வல​கத்​துக்கு (ஐசிஇ) வழக்​க​மான குடியேற்​றப் பிரிவுச் சோதனைக்​காக சென்​றுள்​ளார். அப்போது அவரை, அதி​காரி​கள் கைது செய்து தடுப்​புக் காவலில் வைத்​துள்​ளனர். கரோனா தொற்று காலத்​தின்​போது வெங்கட வசம்​செட்​டி, இந்தியா​வுக்கு சென்று 7 மாத காலம் தங்​கி​யிருந்​தார். இதனால் அவர் தனது அமெரிக்க நிரந்தர வசிப்​பிட உரிமையை இழந்துவிட்டார் என்​றும், அதனால்​தான் தற்​போது தடுப்​புக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளார் என்​றும் அமெரிக்​கா​வில் உள்ள உள்​நாட்​டுப் பாது​காப்​புத்​துறை தெரி​வித்​துள்​ளது. இதையடுத்து வெங்கட வசம்​செட்​டியை தடுப்​புக் காவலில் இருந்து வெளியே கொண்டு வரு​வதற்​காக அவரது மகள்​கள் சட்ட உதவியை நாடி​யுள்​ளனர். வெங்கட வசம்​செட்டி தனது வசிப்​பிடத்தை மாற்​று​வ​தாக அமெரிக்க அதி​காரி​கள் கூறும் குற்​றச்​சாட்​டை​யும், வசம்​செட்டி குடும்​பத்​தார் மறுத்​துள்​ளனர். இந்​தி​யா​வில் இருந்த 7 மாத காலத்​தி​லும் அமெரிக்கா​வுட​னான தனது தொடர்​பு​களை வெங்கட வசம்​செட்டி தொடர்ந்து வைத்​திருந்​த​தாக​வும், தனது வேலையை அவர் தொடர்ந்​த​தாக​வும் அவர்கள் தெரி​வித்​துள்​ளனர். இந்​தி​யா​வுக்​குச் சென்​றது நிரந்தரமாக அங்கு குடியேறு​வதற்​காக அல்ல என்​றும் வெங்கட வசம்​செட்டி தரப்​பு விளக்​கம்​ அளித்​துள்​ளது. மகள்களுடன் வெங்கட வசம்செட்டி.