
சென்னை, செப். 1- துலீப் டிராபி போட்டியில், 57 ஆண்டுகளுக்கு பின், 16 வயது 23 நாட்களில் அரைசதம் அடித்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். 1969-ல் லக்ஷ்மன் சிங் இந்த சாதனையை நிலைநிறுத்தியிருந்தார். தற்போது, வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி, 81 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார்.
இதில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். ஹர்ஷ் துபே பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த அபிமன்யு ஈஸ்வரன், 106 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அவர், ஆர்யன் பாண்டே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். முதல் விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி, 25.2 ஓவர்களில் 161 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர், கிழக்கு மண்டல அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து, 57 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குமார் குஷாக்ரா 0, சுதிப் குமார் கராமி 25, விராட் சிங் 5, கேப்டன் இஷான் கிஷன் 16, அனுகுல் ராய் 16, முகமது கவுனைன் குரேஷி 13, அபிஜித் சர்க்கார் 2, முகேஷ் குமார் 3 ரன்களில் வெளியேறினர்.















