Home செய்திகள் உலக செய்திகள் எச்-1பி: மனைவி பணிக்கு சிக்கல்

எச்-1பி: மனைவி பணிக்கு சிக்கல்

வாஷிங்டன், செப்டம்பர்2-
அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா பெற்று பணிபுரியும் வெளிநாட்டினரின்வாழ்க்கைத் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பணி உரிமத்தை (EmploymentAuthorisation Document – EAD) ரத்து செய்ய அமெரிக்க அரசு தீவிரமாகபரிசீலித்து வருகிறது. இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக அமெரிக்காவில் குடியேறிபணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்திய குடும்பங்களுக்கு, குறிப்பாக இந்தியபெண்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சவாலையும் ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைமுறையில் உள்ள இந்த வசதி, எச்-1பி விசாவைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் (H-4 விசா வைத்திருப்பவர்கள்)
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணிபுரிய வழிவகுத்தது. தற்போது, உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS), இந்த எச்-4 விசா வைத்திருப்பவர்களை பணி உரிமம் பெற
தகுதியற்றவர்களாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 2015-ம் ஆண்டுமுன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தவிதிமுறை, பலரது வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போதுஇந்த விதியைத் திரும்பப் பெறுவதன் மூலம், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள்வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.