Home செய்திகள் தேசிய செய்திகள் பஞ்சாப் பல்கலை. தேர்தலில் ஏபிவிபி வெற்றி

பஞ்சாப் பல்கலை. தேர்தலில் ஏபிவிபி வெற்றி

சண்டிகர், செப்டம்பர் 2-
பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.
ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கித் பிதான் 3,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பான ஏஎஸ்ஏபி-யைச் சேர்ந்த அடில் பிரார் 512 வாக்குகள் குறைவாகப் பெற்றார்.பஞ்சாப் பல்கலைக்கழக வரலாற்றில் ஏபிவிபி தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணவர் சங்க தலைவர் பதவியை கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் மாணவர் அமைப்பு ஏபிவிபிக்கு ஆதரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியாக புதிய கூட்டணி குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.
ஆம் ஆத்மி ஆதரவுடன் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் புதிதாக உருவான கரப்பான் பூச்சி இயக்கத்துக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் பஞ்சாபில் தற்போது செல்வாக்கு குறைந்துள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.