Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மீது பதிலடி

அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மீது பதிலடி

வாஷிங்டன், செப். 3- அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை நோக்கி ஈரான் நடத்திய வான் வழித் தாக்குதல்களை, பஹ்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும், பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகளை தாக்கியதில் 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு தரப்புகளுக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக, பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக நீடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, சர்வதேச பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. பஹ்ரைன் மீது தாக்குதல் நடப்பதற்கு முன்பு, ஈரான் ஜோர்டானை நோக்கி ஏவுகணைகள், குவைத்தை நோக்கி ட்ரோன்களை ஏவியதாகவும் அவை இடைமறிக்கப்பட்டதாகவும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் திங்களன்று தனது கடல் பகுதியை நோக்கி வந்த ஈரானிய ட்ரோனைத் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார். ஈரானுடன் புதிய ஒப்பந்தம் செய்வதில் தனக்கு ஆர்வமில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு மற்றும் ஈரானின் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்சமயம் அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.