
வாஷிங்டன்: செப்டம்பர் 4-
இந்தியா மற்றும் ஈரான் இடையே எந்தவிதமான வர்த்தக பேச்சுவார்த்தையும் நடை பெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. குறிப்பாக, ஈரான் சார்ந்த கிரிப்டோகரன்சி, தொழில்நுட்பங்கள், தங்கம், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் சந்தித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியது: “இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். எந்த நாடும் ஈரானுக்கு உதவி செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். ஈரானின் வருவாயை முடக்க வேண்டும். இதன் மூலம் அந்த நாட்டின் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. மேலும், ஈரான் அரசு அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
ஈரான் தாக்குதல் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள லராக் தீவுக்கு மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஈரானின் சிரிக், குசெஸ்தான் பகுதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசியது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர், 68 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.















