Home தலைப்பு செய்தி வெள்ளம் 275 இந்தியர்கள் மாயம்: மத்திய அரசு தகவல்

வெள்ளம் 275 இந்தியர்கள் மாயம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: செப்டம்பர் 5-
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 166 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த தகவல்களை வெளியிட்டார். மேலும், மாயமான இந்தியர்களை கண்டறிய இந்திய அரசு நேபாள அரசுடன் மற்றும்
இந்திய மாநில அரசுகளுடன் தீவிர தொடர்பில் இருப்பதாகவும், நேபாள அதிகாரிகளின் மீட்பு முயற்சிக்கு நன்றியை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
சீனா வழியாக திபெத்திய தன்னாட்சி பகுதிக்குள் நுழைந்த 1907 இந்தியர்கள் பத்திரமாக நேபாள எல்லையை கடந்து வந்துள்ளதாகவும், திபெத் பகுதியில் இந்தியர்கள் யாரும் சிக்கியதில்லை என்பதையும் தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேபாளத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்றும், அதற்கேற்ப கூடுதல் தடயவியல் கருவிகள், தற்காலிக பெய்லி பாலங்கள் மற்றும் பிற நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளன என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போன இந்தியர்களின் நிலைமை குறித்து உறுதியான தகவல் இல்லாததால், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பு. வெள்ளம் நேபாளத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்த நிலையில், இந்த வெள்ளம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது