Home செய்திகள் உலக செய்திகள் ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பை பிரதிபலிக்கும் புதிய வரைபடம்

ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பை பிரதிபலிக்கும் புதிய வரைபடம்

நியூயார்க், செப். 6: ஐ.நா. சபையில் ஆப்பிரிக்க நாடுகள் சமர்ப்பித்த புதிய உலக வரைபடம் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது, மேலும் உக்ரைன், எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.அமெரிக்க தூதர் யரினா பெரென்செவிச், “உலகம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும். 16-ம் நூற்றாண்டு வரைபட மாற்றம் எந்த பயனும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார். புதிய வரைபடத்தில் ஆப்பிரிக்கா பெரியதாகவும், வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா சிறியதாகவும் மாறியுள்ளது. இந்தியாவுக்கு பெரிதாக மாற்றம் இல்லை. ஆப்பிரிக்காவுடன் உறவை மேம்படுத்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. இதனால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் புதிய வரைபடத்தை ஆதரித்தன.