Home செய்திகள் தேசிய செய்திகள் டேங்க் வெடித்து 2 வீரர்கள் பலி

டேங்க் வெடித்து 2 வீரர்கள் பலி

சட்டோகிராம்: செப். 10-
வங்​கதேசத்தின் சட்டோகிராம் நகரிலுள்ள ஹதஸாரி படைத்தள மைதானத்தில் ராணுவ வீரர்கள் நேற்று வழக்கமான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் பயிற்சியில் சீனாவில் தயாரான டைப்-59 வகை கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு கவச வாகனம் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், அருகிலிருந்த ஒரு ராணுவ அதிகாரியும் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.