
பல்நாடு: செப். 11:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டுக்குள் இருந்த 46 சவரன் தங்க நகைகள், 2.4 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பார்வதி உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.













