
பெங்களூர்: அக். 1-
பெங்களூர் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில் உள்ள தொட்ட குப்பி குடிசை பகுதி மழை வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெள்ளத்தில் வெளியேறினர். இந்த துயர சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர்
வி.மூர்த்தி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது.
தொட்ட குப்பி என்பது கர்நாடக அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு ஸலம் குடிசை பகுதி ஆகும். ஆனால் இவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி கர்நாடக அரசிடம் கர்நாடக மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பலமுறை நாங்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தோம் நேரில் சென்று புகார் கொடுத்தும் பல போராட்டங்களும் நடத்தி இருக்கிறோம் ஆனாலும் இந்த மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். ஏழை எளிய உழைக்கும் மக்கள் தங்கள் குடிசைகளில் நன்றாக நிம்மதியாக தூங்கக்கூட முடியாத ஒரு அவல நிலை மழை வெள்ளத்தில் அவர்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் எல்லாம் நனைந்து நாசமாகி விட்டது தூங்க முடியாமல் வீட்டில் இருக்கவும் முடியாமல் குழந்தை குட்டிகளுடன் அவர்கள் வெளியேறி விட்டனர் இந்த மக்களுக்கு அரசு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறேன் இவ்வாறு கட்சியின் மாநில செயலாளர் வி மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கூறினர்.














