
லாகூர், அக். 24-
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, அந்நாட்டு ரூபாய் மதிப்பில் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,500 ஆகும்.பாகிஸ்தானின் சமையல் எரிவாயு தேவையில் 70 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஈரான்–அமெரிக்கா போரால் தாப்தான் எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், தரைவழியாக நடைபெற்று வந்த எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு கிலோ சமையல் எரிவாயு ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான ஒரு சிலிண்டரின் விலை அந்நாட்டு ரூபாய் மதிப்பில் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் ரூ.3,425-க்கு விற்கப்படுகிறது.














