
சென்னை: அக். 28-
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்பட்ட புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் 26-ம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தபோது, திமுக எம்எல்ஏ சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுகவினர் போலீசாரைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வாசலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சேகர்பாபு மற்றும் கலாநிதி வீராசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாகப் பேசுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.













