Home மாவட்டங்கள் சென்னை பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை

பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை

சென்னை: அக். 29-
தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் நெருங்​கிய தோழியும், துணிக்​கடை அதிபரு​மான சண்​முகபி​ரியா என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர்.
அப்​போது, கோடிக் கணக்​கில் பணம் மற்​றும் பணப்​பரிவர்​தனை தொடர்​பான முக்கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது.
தமிழகத்​தில் உள்ள பல்​வேறு தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் மற்​றும் அரசு அனுமதி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலிக்​கப்​பட்​ட​தாகப் எழுந்த புகார்​கள் அடிப்​படை​யில், சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதன்​பேரில் கடந்த 26-ம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்​பில் மகேஸ் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.
மேலும், தனியார் பள்ளி நிர்​வாகங்​களிடம் பணம் வசூலித்​த​தாகக் கூறப்​படும் முன்​னாள் நிர்​வாகி​கள் மற்​றும் தலைமறைவாக உள்ள முத்​துக்​குமார் உள்​ளிட்​டோரின் தொடர்​பு​கள் குறித்​தும் விசா​ரணை விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ முத்​துக்​குமார் மூலம் துணிக்​கடை அதிபர் சண்​முகபி​ரியா என்​பவருக்கு பணப்​பரிவர்த்​தனை நடந்​துள்​ள​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்டு குறித்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டது. தொடர்ந்து, சண்​முகப்​பி​ரியா​வுக்கு சொந்​த​மான நீலாங்​கரை வீட்​டில் ஏற்​கெனவே சோதனை நடத்​தப்​பட்​டது.