
சென்னை, நவ. 1-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் இந்த உயர்வை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து,
மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், முதல்வர் விஜய் இந்த விவகாரத்தைப் பரிசீலித்து, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 63 சதவீதமாக வழங்கப்படும். இந்த உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.













