Home செய்திகள் தேசிய செய்திகள் ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி பேரணி: நேஹா போரா ஆதரவு

ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி பேரணி: நேஹா போரா ஆதரவு

புதுடெல்லி, நவ.1- தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்​லி​யில் ராம்​லீலா மைதானத்​தில் இன்று (நவ.1-ல்) மீண்​டும் மாபெரும் பேரணி நடை​பெறும் என இண்​டியா கூட்​டணி அறி​வித்​துள்​ளது.

இது​குறித்து இடதுசா​ரி​களின் மாணவர் பிரிவான அகில இந்​திய மாணவர் சங்​கத்​தின் (ஏஐஎஸ்ஏ) தலை​வர் நேஹா போரா தனது எக்ஸ் சமூக வலை​தள பதி​வில், ‘இண்​டியா’ கூட்​ட​ணி​யின் பேரணி​யில் மக்​கள் பங்​கேற்க வேண்​டும். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும், எஸ்ஐஆர் நட​வடிக்​கைகளுக்கு தடை விதிக்​கப்​பட வேண்​டும்.

2023-ம் ஆண்டு இயற்​றப்​பட்ட சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும். இதற்​காக, எங்​கள் மாணவர் இயக்​கம், நவம்​பர் 1-ம் தேதி ராம்​லீலா மைதானத்​துக்கு வரும். வாக்​களிக்​கும் உரிமையைப் பாது​காக்​கவும், ஜனநாயகத்​தின் புனிதத்​தைக் காக்​கவும் அனைவரும் ராம்​லீலா மைதானத்​துக்கு வரு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன்’ எனக் குறிப்​பிட்​டுள்​ளார். இண்​டியா கூட்​டணி பேரணிக்கு கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) தலை​வர் அபி​ஜித் திப்​கேவும் ஏற்​கெனவே ஆதரவு தெரி​வித்​திருந்​தார். தீபாவளிப் பண்​டிகை வரும் நிலை​யில், டெல்​லியின் வியாபாரி​கள் சங்​கம் கோரிக்கை விடுத்​தும், ராம்​லீலா பேரணியை ஒத்திவைக்க ராகுல் மறுத்து விட்​டார்.

இந்​தப் பேரணி காரண​மாக டெல்லி வியாபாரி​களுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்​படும் என அறி​விக்​கப்​பட்​டிருந்​தது. இதற்கு காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்​கும் வியாபாரி​கள் சங்​கத்​தினர் கடிதம் எழுதி​யும் பலன் கிடைப்​ப​தாகத் தெரிய​வில்லை.

இது தொடர்பாக, கடந்த அக்​டோபர் 9-ல் இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் குடியரசு தலை​வரை சந்​தித்து முறை​யிட்​டனர். மீண்டும் அவரை சந்​திக்க இண்​டியா கூட்​டணி திட்​ட​மிட்​டுள்​ளது.