Home மாவட்டங்கள் சென்னை ஆவின் போனஸ் வழங்கல் விழாவால் அதிகாரிகள் அதிர்ச்சி

ஆவின் போனஸ் வழங்கல் விழாவால் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை, நவ. 5-
பால்வளத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சியை விழா போல் நடத்த அமைச்சர் விஜயலட்சுமி உத்தரவிட்டது, ஆவின் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்வளத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடப்பாண்டில் 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 3,002 பேருக்கு போனஸ் வழங்குவதற்காக ரூ.4.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி நேற்று காலை வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெறும் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையை கண்காணிக்கவே அவர் வந்திருப்பார் என அதிகாரிகள் கருதினர். ஆனால், ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை விழா போல் நடத்த வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியைப் போல், போனஸ் வழங்குவதற்கான ஆணையை ஆவின் அதிகாரிகள் அவசரமாகத் தயாரித்தனர். பின்னர் அந்த ஆணை ஆவின் ஊழியர்களிடம் வழங்கப்பட்டது.
அப்போது அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.