
டெஹ்ரான், நவ. 5-
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்பை கிண்டல் செய்யும் ஏஐ உருவாக்கிய காணொலியை இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டது.அந்தக் காணொலியில் சோர்வாகத் தோன்றும் ட்ரம்பை, வெள்ளை மாளிகை அதிகாரிகளைப் போன்ற 4 பேர் தூக்கிச் சென்று குப்பைத் தொட்டியில் வீசுகின்றனர். அதில், ‘அமெரிக்க இடைக்காலத் தேர்தல்’ என்ற தலைப்பும், சிரிக்கும் எமோஜியும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவுக்கு சமூக வலைதளப் பயனாளர்கள் பலர் எதிர்வினையாற்றினர்.சிலர் ட்ரம்பையும் அவரது கொள்கைகளையும் கிண்டல் செய்தனர். “ஜனநாயகத்துக்கு இன்று மிகச் சிறந்த நாள்” என்று ஒருவர் பதிவிட்டார். “சர்வதேசக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது” என்று குறிப்பிட்ட மற்றொருவர், ஈரான் தலைமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஒருவர், “தாம் தொடங்கிய அநியாயமான, சட்டவிரோதமான ஈரான் போரில் ஏற்பட்ட தோல்வியை ட்ரம்ப் ஏற்க வேண்டும்” என்று பதிவிட்டார்.













