Home செய்திகள் தேசிய செய்திகள் தூய்மை இந்தியா 2028 வரை நீட்டிப்பு

தூய்மை இந்தியா 2028 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: நவ.6-
மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா ஊரக (கிராமின்) திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, திட்டத்தை நீட்டிக்கக் கோரி நிதி அமைச்சகத்தை அணுகியிருந்தது. இதையடுத்து, நீட்டிப்புக்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், நாடு முழுவதும் எஞ்சியுள்ள அனைத்து கிராமங்களும் 2028-ம் ஆண்டு மார்ச் 31-க்குள் ‘திறந்தவெளி கழிப்பிடம் அற்ற நிலையைத் தாண்டிய’ சான்றிதழைப் பெறுவதை குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும், 2028-ம் ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு இத்திட்டத்துக்கு மேலும் காலநீட்டிப்பு வழங்கப்படாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையைத் தொடர்ந்து பராமரித்து, திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை முறையாகச் செயல்படுத்தி தூய்மையாக இருக்கும் கிராமங்கள் ‘ஓடிஎப் பிளஸ்’ கிராமங்கள் என வரையறுக்கப்படுகின்றன இந்தியாவில் உள்ள மொத்தம் 5.86 லட்சம் கிராமங்களில் இதுவரை 5.70 லட்சம் கிராமங்கள் ‘ஓடிஎப் பிளஸ்’ நிலையை அடைந்துள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.