Home மாவட்டங்கள் சென்னை பள்ளிகளில் விண்வெளிப் பாடம் தேவை: இஸ்ரோ தலைவர்

பள்ளிகளில் விண்வெளிப் பாடம் தேவை: இஸ்ரோ தலைவர்

சென்னை: நவ.6-
பள்ளி அறிவியல் பாடத்திட்டத்தில் விண்வெளி தொடர்பான பாடங்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் யோசனை தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான ரஷ்யாவைச் சேர்ந்த யூரி காகரினின் மார்பளவு சிலை, ரஷ்ய நிதியுதவியுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலை திறப்பு விழா, மையத்தின் செயல் இயக்குநர் கே.சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் ஆகியோர் இணைந்து சிலையைத் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் நாராயணன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் சோவியத் யூனியன் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு ரஷ்யா அளித்த உதவியை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். ஒரு காலத்தில் விண்வெளித் தொழில்நுட்பத்துக்காக பிற நாடுகளைச் சார்ந்திருந்த இந்தியா, தற்போது மற்ற நாடுகளின் விண்வெளித் துறை வளர்ச்சிக்கும் உதவும் அளவுக்கு முன்னேறியுள்ளது என்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். 1969-ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்தான். அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பியவர் யூரி காகரின். இந்தியாவிலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.பள்ளிகளில் அறிவியல் பாடங்களுடன் விண்வெளி தொடர்பான பாடங்களும் இடம்பெற வேண்டும். அவற்றைக் கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் பெய்வதை முன்கூட்டியே கணிப்பது, தட்பவெப்பநிலையைச் சரியாக கணிப்பது போன்றவை வானிலைத் துறையின் பணிகள். இதற்குத் தேவையான தரவுகளை செயற்கைக்கோள் மூலம் இஸ்ரோ வழங்குகிறது.