Home செய்திகள் தேசிய செய்திகள் ஓய்வுப் பரிசாக பள்ளிக்கு விளையாட்டு மைதானம்

ஓய்வுப் பரிசாக பள்ளிக்கு விளையாட்டு மைதானம்

திருவனந்தபுரம், நவ. 8-
கேரளத்தின் திருச்சூர் மாவட்டம், மேற்கு கோரட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில், கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் வனஜா. இம்மாத இறுதியில் அவர் ஓய்வு பெற உள்ளார். அந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து, தனது ஓய்வு நாள் பரிசாக பள்ளிக்கு புதிய விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க வனஜா முடிவு செய்தார். இதற்காக தனது சேமிப்புத் தொகையில் இருந்து ரூ.5 லட்சத்தை அவர் நன்கொடையாக வழங்கினார்.முன்னாள் மாணவர் ஒருவர் குறைந்த செலவில் மைதானத்தைச் சீரமைத்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம், மாணவ, மாணவியர் பயன்படுத்தி வந்த மோசமான நிலையில் இருந்த மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.