
பெங்களூர், நவ. 8-
கர்நாடக பாஜக தலைவரும் சட்டமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவருமான சலவாதி நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கோலாரில் நடைபெற்ற பாஜகவின் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ பேரணியில் பேசிய அவர், காங்கிரஸார் நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயன்றால், பாஜக தொண்டர்களும் ஆதரவாளர்களும் காங்கிரஸ் கட்சியினரைத் துண்டு துண்டாக வெட்டி அரபிக்கடலில் வீசுவார்கள் என்று பேசியதாக சர்ச்சையானது. இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் செலவாதி நாராயணசாமி வீட்டுக்கு கத்தி போன்ற ஆயுதங்களை காங்கிரஸ் கட்சியினர் பிலிங் கிட் ஆப் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பெங்களூரில் போலீசார் தீவிர வாகன பரிசோதனைகள் ஈடுபட்டு ஜலுவாதி நாராயணசாமி வீட்டிற்கு பிலிங்கிட் மூலம் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு செல்லப்படும் கத்திகளையும் வாகனங்களையும் இன்று பறிமுதல் செய்தனர்.













